திருக்கோணேஸ்வர இணையதளதிற்கு உங்களை வரவேற்கின்றோம்
வளம் கொழிக்கும் திருகோணமலை மண்ணின் மத்தியில் பண்ணாளர்கள், பாவலர்கள் பலர் வாழும் திருகோணமலையில் கோயில் கொண்ட கோணேசப் பெருமானின் கருணையினை அறியாதவர் இல்லை. திருக் கோணேஸ்வர ஆலயம் சென்று வழிபட முடியாவிட்டாலும், மனதிலே கோணேசப் பெருமானை நிறுத்தி வழிபடும் அடியார்களுக்கு தரிசனத்தை வழங்கும் நோக்குடன் உருவாக்கப்பட்ட ஒரு முயற்சியே திருக்கோணேஸ்வரரின் இவ் இணைய தரிசனம்.(இவ்விணையம் வியாபார நோக்கங்களுக்காக அமைக்கப்படவில்லை)

"குரைகடலோதம் நித்திலம் கொழிக்கும் கோணமாமலை அமர்ந்தாரே"
மாணிக்கக் கற்களும் அளவின்றிக் கரையில் சேர, ஒலிக்கின்ற கடலின் அலைகள் முத்துக்களைக் கொழிக்கும் திருக்கோண மாமலையில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றார்.
மேலும் படிக்கபுகைப்படத் தொகுப்புகள்